Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கங்காவிலும் கலக்குகிறாராம் கோவை சரளா!

19 நவ, 2014 - 10:46 IST
எழுத்தின் அளவு:

கோயமுத்தூரைச்சேரந்தவரான டைரக்டர் கே.பாக்யராஜ்தான், தான் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் கோவை சரளாவை அறிமுகம் செய்தார். அதையடுத்து செந்திலுக்கு ஜோடியாக பல படங்களில நடித்ததோடு, கோவை தமிழில் பேசி நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார் கோவை சரளா.


அந்தவகையில், இதுவரை 160 படங்களில் நடித்து விட்ட அவரது மார்க்கெட் இடையில் தடுமாறினாலும், லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா படத்திற்கு பிறகு மீண்டும் சூடு பிடித்தது. குறிப்பாக, அதே படம் தெலுங்கிலும் வெளியானதால், தமிழை விட அங்குதான் அவருக்கு அதிகமான படங்கள் புக்காகின.


பெரும்பாலும் திகில் படங்களிலேயே நடித்த கோவை சரளா, தமிழிலும் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்ற திகில் படத்தில் நடித்தவர், இப்போது அதே ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் முனி-3 கங்கா படத்திலும் நடிக்கிறர்ர். காஞ்சனா படத்தில் தேவதர்ஷினி, ஸ்ரீமனுடன் காம்பினேஷன் காட்சிகளில் நடித்த கோவை சரளா, இந்த படத்தில் ஸ்ரீமனுடன் இணைந்து நடித்துள்ளாராம். முக்கியமாக, காஞ்சனாவில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரசிகர்களை நடுநடுங்க வைக்கும் வகையில் நடித்து அவர் ஸ்கோர் பண்ணியிருந்ததால், இந்த படத்தில் இன்னும் கூடுதலான காட்சிகளை கோவை சரளாவுக்கு கொடுத்திருக்கிறாராம் லாரன்ஸ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in