Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிட்டிசன் கே - கமலின் சுயசரிதை புத்தகம்

19 நவ, 2014 - 00:07 IST
எழுத்தின் அளவு:

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அரை நூற்றாண்டுக்கும் மேலான திரையுலக அனுபவம் கொண்டவர் கமல். தற்போதையை திரைப்பட கலைஞர்களில் கமல் அளவுக்கு திரையுலக அனுபவம் வாய்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ரஜினியே கமலுக்குப் பிறகு திரைப்படத்துறைக்கு வந்தவர்தான். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான இந்த காலக்கட்டங்களில் கமல் சந்தித்த அனுபவங்கள் நிச்சயமாக வேறு ஒருவருக்கு கிடைத்திருக்காது. அதெல்லாம் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்தால் எப்படி இருக்கும்?

துள்ளிக் குதிக்க தோன்றுகிறதா?

வெயிட்..விரைவில் வருகிறது கமலின் சுயசரிதை புத்தகம். சிட்டிசன் கே என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை கமல் நேரடியாக எழுதவில்லை. கமல் சொல்ல சொல்ல அவரது நண்பரும், திரைப்பட இயக்குநரும், தற்போது பிரசாத் பிலிம் இன்ஸ்ட்டியூட்டின் தலைவருமான ஹரிஹரன் எழுதி இருக்கிறார்.

தமிழில் மங்கை ஒரு கங்கை என்ற படத்தை இயக்கிய ஹரிஹரன் மலையாளத்தில் ஏராளமான படங்களை இயக்கியவர். அவற்றில் பல படங்கள் கேரள மாநில மற்றும் தேசிய விருதுகளைப்பெற்ற படங்கள்.

சிட்டிசன் கே புத்தகத்தில் தன் தொழில் சார்ந்த அனுபவங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கிறாராம் கமல். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், மனைவிகள் போன்ற விஷயங்கள் பற்றி வாயைத் திறக்கவில்லையாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in