ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாதவன் தமிழில் ஹீரோவாக அறிமுகமானாலும், தமிழைவிட ஹிந்தியில் நடிப்பதில்தான் ஆரம்பத்திலிருந்தே அதிக கவனம் செலுத்தி வருகிறார். 2012 ஆம் வருடத்தில் லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை படத்தில் நடித்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதன் காரணமாகவோ என்னவோ வேட்டை படத்துக்குப் பிறகு மாதவன் தமிழ்ப்படங்களில் நடிக்கவே இல்லை.
ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் தயாராகி வரும் இந்தப்படத்தின் ஹிந்தி பதிப்புக்கு "சால காதூஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
துரோகி படத்தை இயக்கிய சுதா கே. பிரசாத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடிப்பதால், அந்த வேடத்துக்காக கடந்த சில மாதங்களாக நீண்ட தலைமுடி, தாடி வைத்திருந்தார் மாதவன். இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஊட்டியில் நடந்து முடிந்துள்ளது.
கடைசிநாள் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தனது நீண்ட முடி மற்றும் தாடியை எடுத்துவிட்டார் மாதவன். இந்தப் படத்தை அடுத்து தனு வெட்ஸ் மனு-2 ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக இதன் முதல் பாகத்தில் நடித்த அதே கங்கணா ரணாவத் நடிக்கிறார். 2011 ல் மாதவன் கங்கணா ரணவத் நடிப்பில் வெளியான தனு வெட்ஸ் மனு படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது நினைவிருக்கலாம்.