‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் கார்த்திக் ஜி கிரிஷ். வெங்கட்பிரபுவின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த வைபவ்வை ஹீரோவாக்கி கப்பல் என்ற படத்தை இவர் இயக்கினார். ஐ ஸ்டுடியோஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற படநிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
கப்பல் படத்தின் ஃபர்ஸ்ட்காப்பி ரெடியானதும், மரியாதை நிமித்தமாக தன்னுடைய குருநாதரான ஷங்கருக்கு படத்தைப் போட்டுக்காட்டினார் கார்த்தின் ஜி கிரிஷ். கப்பல் படத்தைப் பார்த்த ஷங்கர் படத்தை மிகவும் ரசித்ததோடு தன் சிஷ்யரை மனதார பாராட்டி இருக்கிறார். அதோடு, கப்பல் படத்தை தானே வாங்கிக் கொள்வதாகவும் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் பேனரில் வெளியிடுவதாகவும் சொன்னவர் அதன்படி கப்பல் படத்தை விரைவில் ரிலீஸ் செய்கிறார்.
அதற்கு முன்னர், கப்பல் படத்தின் இசையை பிரம்மாண்டமான விழாவில் வெளியிட இருக்கிறார் ஷங்கர். வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள இமேஜ் ஆடிட்யோரியத்தில் கப்பல் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையை வெளியிட விஜய் பெற்றுக் கொள்ள இருக்கிறார். அதேவிழாவில் கப்பல் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட உள்ளது. டிரெய்லரை விக்ரம் வெளியிடுகிறார்.