பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான தொடர் மகாபாரம். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான புராண தொடர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்ததோடு. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் தொடர்ந்து முன்னணியில் இருந்தது.
சுமார் 20 கோடி ரூபாய் செலவில் 267 எபிசோட்களாக இந்தியில் தயாரிக்கப்பட்ட மகாபாரதத்தை 6 இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். முதலில் ஸ்டார் பிளஸ்சில் ஒளிபரப்பான தொடர் பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு விஜய் டி.வியில் ஒளிபரப்பானது. ஒரு வருடத்திற்கு மேலாக ஒளிபரப்பான இந்த தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்தது.
மகாபாரதம் தொடங்கப்பட்டபோது ஆரம்ப கால எபிசோட்களை பலர் பார்க்கவில்லை போக போகத்தான் தொடர் பிரபலமானது. இதனால் மகாபாரத்தை மீண்டும் ஒளிபரப்ப கோரி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு தினமும் ஆயிரக்கணகக்கில் தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும் வந்து குவிகிறதாம்.