ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் பாம்பே வெல்வெட். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. இந்தாண்டே ரிலீஸாக இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்தாண்டு மே மாதம் 15ம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யாப் கூறுகையில், படத்தில் சில வேலைகள் பெண்டிங் உள்ளது. ஆதனால் பட ரிலீஸ் தாமதமாகியுள்ளது. இப்போது படத்திற்கான ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டோம். இனி படத்தை பெரிய அளவில் மார்க்கெட் செய்ய இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் விஜய் சிங் கூறுகையில், படத்தில், விஷூவல் எபெக்ட்ஸ் பணிகள் நிறைய இருக்கின்றன. அந்தப்பணிகள் இன்னும் முடியவில்லை, அதனால் பட ரிலீஸ் தாமதமாகியுள்ளது. உறுதியாக அடுத்தாண்டு மே மாதம் படம் பிரமாண்டமாக ரிலீஸாகும் என்று கூறியுள்ளார்.