Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயசேதுபதிக்கு பிடித்த பண்ணையாரும் பத்மினியும்!

18 நவ, 2014 - 11:49 IST
எழுத்தின் அளவு:


தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டால் பாலகுமாரா என்று வரிசையாக ஹிட் கொடுத்து வந்த விஜயசேதுபதிக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்த படம்தான் பண்ணையாரும் பத்மினியும். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்தபடம் வசூல் ரீதியாக சறுக்கி விட்டது. அதனால் தொடர் வெற்றி நாயகனாக இருந்த விஜயசேதுபதிக்கு முதல் தோல்வியாக அந்த பட்ம் அமைந்தது.


இருபபினும், அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். இந்தநிலையில், வருகிற 21-ந்தேதி அவர் நடித்துள்ள வனமம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடி கிடையாது. ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


ஆனால் இப்போதும் தனது முதல் தோல்வி படமான பண்ணையாரும் பத்மினியும் படம்தான் தான நடித்ததில் அதிகம் பிடித்த படமாக சொல்கிறார் விஜயசேதுபதி. இந்த நிலையில், தற்போது அப்படம் கேரளாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருப்பது விஜயசேதுபதிக்கு கூடுதல் சந்தோசத்தைக் கொடுத்துளளது.


இதையடுத்து, அந்த படம் எனக்கு பிடித்தது மட்டுமின்றி நல்ல படம் என்று நான் ஏற்கனவே சொல்லிவந்தேன். ஆனால், இப்போது சர்வதேச திரைப்பட விழாவிற்கும் அப்படம் தேர்வாகியிருப்பது. இன்னும் அந்த படத்திற்கான தரத்தை உலக அரஙகில் வெளிச்சம் போடப்பட்டிருக்கிறது என்கிறார் விஜயசேதுபதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in