ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
இந்திய திரையுலகம் மட்டுமல்லாது உலகத்திலுள்ள இந்திய திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக லிங்கா படம் அமைந்துள்ளது. டிசம்பர் மாதம் 12ம் தேதி, ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று வெளியாக உள்ள இப்படம் அமெரிக்காவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாம். ரஜினிகாந்த் இதற்குமுன் நடித்து வெளிவந்த எந்திரன் படம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பலநாடுகளில் திரையிடப்பட்டு வசூலை அள்ளிக்குவித்தது.
எந்திரன் திரைப்படம் வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்ப் படங்களுக்கான உலக அளவிலான மார்க்கெட் மேலும் பரவலாகி இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் தமிழ்ப்படங்கள் அதிகஅளவில் திரையிடப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷிசின்ஹா, ஏ.ஆர்.ரகுமான், கே.எஸ்.ரவிக்குமார்எனபலபிரபலங்கள்இணைந்துள்ள லிங்கா படம் மீது அதிக அளவிலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளதில் ஆச்சரியமில்லை.
தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் லிங்கா படம் அமெரிக்காவில் திரையிடப்பட உள்ளதாம். அமெரிக்கத் திரையுலக வரலாற்றில் லிங்கா படம் புதிய சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளதாக படத்தை வாங்கிவெளியிடும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.