சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனை, நடிகை த்ரிஷா திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. அனுஷ்கா, சமந்தா என போட்டி நடிகைகள் பலர் வந்தாலும், இப்போதும் நான்கு படங்களில் நடித்து கொண்டு பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை த்ரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. மேலும் த்ரிஷா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும், அவரது தாயார் உமா, த்ரிஷாவுக்கு ஏற்ற மணமகனை தேடி வருவதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில் இப்போது நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த வருண் மணியன்...?
இவர் ஒரு பிரபல தொழிலதிபர், தயாரிப்பாளரும் கூட. ரேடியன்ஸ் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில், பாலாஜி மோகன் இயக்கிய, வாயை மூடி பேசவும் படத்தை தயாரித்துள்ளார். இதுதவிர காவியத்தலைவன் படத்தில் இவரும் ஒரு தயாரிப்பாளராக இருக்கிறார். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. மேலும் சில படங்களை தயாரிக்கவும் உள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷாவும், வருணம் மணியனும் சந்தித்து பேசியதாகவும். அதனைத்தொடர்ந்து, இப்போது இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் திருமணம் என்பது மட்டும் தான் தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்போது திருமணம் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை. இதுதொடர்பாக நடிகை த்ரிஷாவின் தாயார் உமாவை தொடர்பு கொண்டபோது அவர் போனை அட்டண்ட் செய்யவில்லை.