தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
முனி படத்தின் 2ம் பாகமான காஞ்சனா படத்தை இயக்கிய ராகவா லாரன்ஸ் அதையடுத்து முனி -3 கங்கா படத்தை இயக்கி வருகிறார். 90 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், சில பாடல் காட்சிகள் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். இந்த படத்தில் லாரன்ஸ்-டாப்சி இருவருமே பத்திரிகையாளர்களாக நடித்திருக்கிறார்கள்.
அப்போது ஒரு பெண் இறந்த விசயத்தை அவர்கள் ஆராய்ந்து செய்தி வெளியிடும் வேலைகளில் இறங்குவார்களாம். அப்படி சென்ற இடத்தில்தான் டாப்சிக்கு பேய் பிடித்து ஆடுவாராம். இறந்து போன் பெண்ணின் ஆவி இவரது உடம்பிற்குள் வந்து இருந்து கொண்டு என்னென்ன சொல்கிறது. அதையடுத்து இவர்களின் செயல்பாடு என்ன என்பதுதான் கங்கா படத்தின் கதையாம். ஆனால், ஆவி டாப்சியின் உடம்புக்குள் வந்த பிறகு பேயாக நடித்தது இவர் இல்லையாம். சின்னத்திரை தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்து வரும் கலைவாணி என்ற நடிகையாம். அவரைத்தான் உடமபு முழுக்க கறுப்பு வண்ணம் தேய்த்து பேயாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்களாம்.