ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபாவளிக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'கத்தி' திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் எனத் தெரிகிறது. ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெறும் படங்களை ரீமேக் செய்வதில் சல்மான் கான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார். அப்படி அவர் ரீமேக் செய்து நடித்த சில படங்கள் மாபெரும் வசூலைக் குவித்துள்ளன.
'கத்தி' படம் ஏற்கெனவே தெலுங்கில் ரீமேக் ஆக வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்த தெலுங்குத் தயாரிப்பாளரிடம், தனக்கு விருப்பமில்லை என பவன் கல்யாண் சொல்லிவிட்டார். அதனால் 'கத்தி' படம் டப்பிங் ஆகி மட்டுமே தெலுங்கில் வெளியாக உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் தமிழில் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற 'கஜினி' திரைப்படம் அதே பெயரில் அமீர் கான் நடிக்க ஹிந்தியில் ரீமேக் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. 'துப்பாக்கி' படம் அக்ஷய் குமார் நடிக்க 'ஹாலிடே' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 'கத்தி' படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க ஆர்வம் காட்டியிருப்பது ஹிந்தித் திரையுலகினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கான் நடிக்கும் படங்கள் 200 கோடி ரூபாய் வசூலை சாதாரணமாகத் தொட்டு வருதால் இந்தக் கூட்டணி இணைந்தால் அது புதிய சாதனையைப் படைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.