ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கன்னடப் படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் இசைவெளியீட்டுவிழா, சென்னை சத்யம் திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகைகள் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
லிங்கா விழா ஹைலைட்ஸ்
* லிங்கா ஆடியோ விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது குருநாதர் எஸ்.பி.முத்துராமன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
* மூன்று முடிச்சு படத்தின் முதல் நான் ரஜினியின் தீவிர ரசிகன் என்று பேசினார் இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன்.
* லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அவரின் மகளாகவும், தலைவரின் ரசிகையாகவும் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.
* கே.எஸ்.ரவிக்குமாரின் தீவிர ரசிகன் நான். நீண்டநாட்களாக எனக்கு படம் பண்ண சொல்லி அவரிடம் கேட்டு வந்தேன், அது இப்போது தான் சாத்தியமானது, அதையும் தாண்டி இவை எல்லாமே கடவுளின் அருளால் சாத்தியமானது. அந்தகடவுள் ரஜினி தான் என்றார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.
* இந்திய சினிமா 100 ஆண்டு ஆனதையொட்டி, ரஜினிக்கு இந்தாண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் என்ற விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.