ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குலாப் கேங் படத்தில் நெகட்டீவ் ரோலில் நடித்த ஜூகி சாவ்லா, இப்போது இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஒன்று, டின்கி மெண்டீஸ் இயக்கும் ஹேப்பி அனிவர்சரி படம், மற்றொன்று ஜெயந்த் லீலாதர் இயக்கும் சக் அண்ட் டஸ்டர். ஹேப்பி அனிவர்சரி படத்தின் கதை அருமையாக இருந்ததால் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறுகிறார் ஜூகி சாவ்லா. அதேசமயம் சக் அண்ட் டஸ்டர் படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறுகிறார் ஜூகி.
இதுகுறித்து அவர் கூறுகையில், சக் அண்ட் டஸ்டர் படத்தின் கதையை ஒரு மாதத்திற்கு முன்பே என்னிடம் கொடுத்துவிட்டனர். ஆனால் சமீபத்தில் தான் அந்த கதையை படித்து பார்த்தேன். படித்தமாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே இப்படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன். ஆசிரியர்களை பற்றியும், இன்றைய கல்வி, எப்படி வியாபாரமாகியுள்ளது என்பதைப்பற்றியும் இப்படம் சொல்கிறது. படத்தில் எனக்கு அழுத்தமான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார்.