'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
சினிமா நடிகர் நடிகைகளைப்பொறுத்தவரை ஒரு விழாவில் கலந்து கொள்ளப்போகிறோம் என்றால் அன்றைய தினத்தில் வித்தியாசமான உடையணிந்து சென்று அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்று பல நாட்களுக்கு முன்பே திட்டமிடுவார்கள். அந்த ஒரு நாளைக்காக லட்சக்கணக்கில் டிரஸ் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், தனுஷ் போன்ற சில நடிகர்கள் ஆடை விசயத்தில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
எப்படி தான் நடிக்கும் படங்களில் பந்தா இல்லாமல் எளிமையான கெட்டப்புகளில் தோன்றுகிறாரோ அதேமாதிரிதான் சினிமா விழாக்களுக்கும் எளிமையாக வருகிறார். அதிலும் சமீபகாலமாக மற்ற நடிகர்களின் பட விழாக்களோ, தான் நடித்த பட விழாக்களோ எதுவாக இருந்தாலும் வேஷ்டி அணிந்து கொண்டு வருவதை வாடிக்கையாக்கி விட்டார் தனுஷ்.
இதுபற்றி பல மாதங்களுககு முன்பு அவரிடம் கேட்டபோது, நாம் தமிழர்கள். நம்முடைய பாரம்பரிய உடை வேஷ்டிதானே. அதனால்தான் அதை அணிந்து வருவதை நான் பெருமையாக நினைக்கிறேன் என்று சொன்ன தனுஷ், அதை தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறார். மேலும், சிலரைப்போன்று மைக்கைப்பிடித்து விட்டால் என்ன பேசுவது ஏது பேசுவது என்பதே தெரியாமல் அவர் எக்கச்சக்கமாகவும் பேசுவதில்லை. அடக்க ஒடுக்கமாக பேசிவிட்டு அமர்ந்து விடுகிறார். ஆக, வேஷ்டி அணிந்த பிறகு தனுஷின் நடவடிக்கையிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் வெளிப்பட்டு வருகிறது.