ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆதவன். டி.வி.நிகழ்ச்சியில் எல்லோரையும் நடிக்கச் சொல்லி கலாய்த்துக் கொண்டிருந்தவர் இப்போது சினிமாவில் தானே நடிக்க வந்து விட்டார். சின்ன சின்ன காமெடி கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த ஆதவன். ஏ.வெங்கடேஷ் இயக்கும் ரொம்ப நல்வண்டா நீ படத்தில் முழுநீள காமெடி கேரக்டரில் நடிக்கிறார். அதோடு கானா பலாவின் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார். பல்லாண்டு வாழ்க படத்திலும் காமெடி செய்கிறார். ஆதவனின் அடுத்த ஆசை ஹீரோவாக நடிப்பது.
"பாஸ் நம்மாளுங்கெல்லாம் ஒவ்வொருத்தரா சினிமாவுல ஹீரோ ஆகுறாங்க. நாமளும் ஆகிட வேண்டியதான். முதல்ல நல்ல காமெடியனா புரூப் பண்ணணும், அதுக்கு இப்போ நடிச்சிட்டிருக்கிற படங்கள் உதவும். அப்புறமாக ஹீரோவா நடிக்கணும். இப்பவே இரண்டு படங்களுக்கு பேச்சு வார்த்தை நடந்துகிட்டிருக்கு. நீங்கல்லாம் "நல்லா நடிங்க பாஸ்"னு என்னை கிண்டல் பண்ணாத அளவுக்கு நானும் நடிப்பேன்ங்ற நம்பிக்கை இருக்கு" என்கிறார் ஆதவன்.