ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுச்சேரி செய்தி விளம்பத்துரை அமைச்சகம், மத்திய அரசின் திரைப்பட விழா இயக்குனரகம், நவதர்சன் திரைப்பட கழகம் ஆகியவை இணைந்து 32வது இந்திய திரைப்பட விழாவை நடத்துகிறது. புதுவை முருகா தியேட்டரில் இன்று (நவ 14) தொடங்கும் இந்த விழா வருகிற 18ந் தேதி வரை நடக்கிறது. மத்திய அரசு சிறந்த படங்களாக தேர்வு செய்யும் படங்களில் இருந்து ஒரு படத்தை தேர்ந்தெடுத்து புதுவை அரசின் விருது இந்த விழாவில் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ராம் இயக்கிய, தங்க மீன்கள் படம் விருதை பெறுகிறது. இன்று நடக்கும் துவக்க விழாவில் புதுச்சேரி முதல் ரங்கசாமி இந்த விருதினையும், பணமுடிப்பையும் வழங்குகிறார்.