வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
அலெக்ஸ் பாண்டியன், சகுணி, பிரியாணி படங்களின் தொடர் தோல்விக்கு பிறகு கார்த்தி ருசித்திருக்கும் வெற்றி மெட்ராஸ். கடந்த செப்டம்பர் மாதம் 26ந் தேதி வெளியான மெட்ராஸ் இன்று 50வது நாளை தொட்டிருக்கிறது. இதில் கார்த்திக்குடன் கேத்ரின் தெரசா, கலையரசன் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருந்தார்கள்.
வட சென்னை மக்களின் வாழ்க்கையையும், அரசியலையும் யதார்த்தமாக பதிவு செய்த படம். கார்த்திக் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் வட சென்னை இளைஞனாக நடித்திருந்தார். படத்தில் அறிமுகமான கலையரசன் இப்போது அடுத்த படத்திலேயே ஹீரோவாகி விட்டார். இயக்குனர் ரஞ்சித் தம்பியை இயக்கி விட்டு இப்போது அண்ணன் சூர்யாவை வைத்து படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். மெட்ராஸ் படத்தை தயாரித்த ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாவே இதனையும் தயாரிக்க இருக்கிறார். கேத்ரின் தெரசா அடுத்த படத்தில் நடிக்கிறார். ஒரு வெற்றி இத்தனை மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.
சென்னையில் சுமார் 30 தியேட்டர்களில் ரிலீசான மெட்ராஸ் தற்போது எஸ்கேப், ஆல்பட், பிவிஆர், சீனிவாசா, மாயாஜால், உள்பட 10 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. 100 நாட்களை தொடும் சாத்தியம் குறைவாகவே இருக்கறது.