மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால், கடுமையான காய்ச்சல் உடன் நடிகை த்ரிஷா அவதிப்பட்டு வருகிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. தற்போது தமிழில் அஜீத்துடன், "என்னை அறிந்தால், ஜெயம் ரவியுடன் "அப்பாடக்கர்" போன்ற படங்களில் நடித்தபடி பிஸியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கன்னடத்தில் கால்பதித்து, அங்கும் வெற்றி நடிகை என பெயர் பெற்றுவிட்டார்.
இந்நிலையில் ஓய்வின்றி தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததாலும், பருவநிலை மாற்றத்தாலும், கடந்த 10 நாட்களாக நடிகை த்ரிஷா கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். படுக்கையிலேயே இருக்குமளவு அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. இதனால் மருத்துவரை சென்று சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளார். இன்னும் சில நாட்கள் ஓய்வெடுக்க சொல்லி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக த்ரிஷா நடித்து வரும் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளன.