Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொப்பி எனக்கு சிறந்த அறிமுகம் தரும் - ரக்க்ஷா ராஜ்!

13 நவ, 2014 - 18:08 IST
எழுத்தின் அளவு:

மலையாள பட உலகம் நமக்கு பல்வேறு கதாநாயகிகளை தந்து இருக்கிறது. தற்போதிய வரவு புது முகம் ரக்க்ஷா ராஜ். அரபிக் கரை ஓரம் இருந்து வரும் அடுத்த பெரிய வரவு ரக்க்ஷா ராஜ் என கணிக்கின்றனர் திரை உலக வல்லுனர்கள். யுரேகாவின் இயக்கத்தில் ராயல் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும் தொப்பி திரைப்படத்தில் அறிமுகமாகும் ரக்க்ஷா பரத நாட்டியம் , குச்சி புடி,மோகினி ஆட்டம், மற்றும் பல நடன கலைகளில் பால்யத்தில் இருந்தே பயிற்சி பெற்றவர். சமூக துறை சார்ந்த படிப்பில் பட்டம் பயின்ற ரக்க்ஷா அந்த கல்வியின் அடிப்படையில் மலையாள கலாசார துறை மற்றும் கலை நிலையம் மூலம் தனது நடிப்பு ஆற்றலை வெளிபடுத்தினார். மாத பெயரம்பர என்ற அமைப்பின் மூலம் உலகெங்கும் சென்று தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டார்.


தமிழ் படங்கள் மீதும், தமிழ் மீதும் பேரார்வம் கொண்ட ரக்க்ஷா தனது அறிமுக படமான தொப்பி பற்றி பேசும் போது தொப்பி என் மனதை கவர்ந்த படமாகும். அறிமுகமாக சிறந்த படமும் கதையும் அவசியம் என்றால், தொப்பி எனக்கு சிறந்த அறிமுகம் தரும் படமாகும். படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளும் எனக்கு நல்ல பாடமாக இருந்தது. என்னுடைய சுய நம்பிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருந்தது. பட குழுவினர் ஒரு குடும்பம் போல் என்னிடம் பாசம் பாராட்டியதை என்னால் மறக்க முடியாது. திரை உலகில் மென்மேலும் சாதிக்க நினைக்கும் எனக்கு தொப்பி மூலம் கிடைக்கும் பாராட்டு சிறந்த உரமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in