'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கஜோல், வெள்ளித்திரையில் மீண்டும் பிரவேசிக்க முயற்சி எடுக்கும்போதெல்லாம், தொடர்ந்து அவருக்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. ராம் மத்வானி இயக்கத்தில் நடிப்பதாக கஜோல் இருந்த நிலையில், பொருளாதார சூழ்நிலையின் காரணத்தால், கஜோர் அதில் இருந்து விலகினார். பின் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க முற்பட்ட நிலையில், தனிப்பட்ட பிரச்னை காரணமாக, அம்முயற்சி கைவிடப்பட்டது. தனது கணவர் அஜய் தேவ்கன் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, படத்தின் முதல் உரிமை தொடர்பாக, அஜய் தேவ்கனிற்கும், ரோஷனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, அஜய் தேவ்கனின் தயாரிப்பில், அஸ்வினி தீரின் இயக்கத்தில், சன் ஆப் சர்தார் படத்தில் கஜோல் நடிக்க இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதிலாவது பிரச்னை வராமல் இருக்க வேண்டும் என்று கஜோல் நினைத்துக்கொண்டிருப்பாரோ...!