Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவன் இவனில் விஷாலுக்கு அரவாணி கேரக்டர்

20 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

நான் கடவுள் படத்தை தொடர்ந்து டைரக்டர் பாலா இயக்கி வரும் அவன் இவன் படத்தில் நடிகர் விஷால் அரவாணி வேடத்தில் நடிக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஷன் ஹீரோவாக தமிழ்சினிமாவை வலம் வந்த விஷால் அரவாணி வேடத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார்? என்ற பேச்சும் எழுந்துள்ளது. படத்தில் ஆர்யாவும் நாயகனாக நடிக்கிறார். அவன் இவன் கதை பற்றி எந்த தகவலும் வெளியாகாத நிலையில், பாலா அளித்த பேட்டியொன்றில், விஷால் அவனாகவும், ஆர்யா இவனாகவும் நடிக்கிறார், என்ற ஒ‌‌ரேயொரு தகவலை மட்டும் தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் அவன் என்று அரவணி கேரக்டரை சொல்வார்கள். அதன்படி பார்த்தால் படத்தில் விஷால் அரவாணியாக நடிப்பது உறுதியாகி விட்டது.

பெரும்பாலான ஹீரோக்கள் அஞ்சுகிற கேரக்டர்தான் இது. தமிழ் நாயகர்களில் பிரகாஷ் ராஜ் மட்டும் அப்பு படத்தில் அவாணியாக நடித்திருந்தார். ஆனால் அவன் இவனில் பிரகாஷ் ராஜ் அளவுக்கு இல்லையென்றாலும், சற்றே பெண்மை சாயலுடன் வளர்கிற ஒரு ஆணாக நடித்திருக்கிறாராம் விஷால். திருநங்கைகளை சகட்டுமேனிக்கு குதறி எடுக்கும் படங்களைதான் இப்போதும் எடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. அவர்களின் உணர்வுகளையும், போராட்டங்களையும் உணர்ச்சிபூர்வமாக சொல்கிற படம் எதுவும் இதுவரைக்கும் வந்ததாக தெரியவில்லை. தெனாவட்டு படத்தில் திருநங்கைகளை மரியாதைக்குரிய கேரக்டராக காட்டியிருந்தார்கள்.

இந்நிலையில்தான் வித்தியாச விரும்பியான பாலா திருநங்கைகள் கதையை கையில் எடுத்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் பெண்களின் குணாதிசயங்கள் மற்றும் சாயலுடன் பிறக்கும் ஒரு ஆண்மகன் சந்திக்கிற பிரச்சனைகளையும் அவன் இவன் படத்தில் லேசாக தொட்டிருக்கிறாராம். இந்த கேரக்டரில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே நடிகர் விஷால் வெளியிடங்களுக்கு செல்லாமலும், தனது கெட்டப்பை வெளிக்காட்டாமலும் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (33) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (33)

Gavas - qatar,இந்தியா
11 ஜூன், 2011 - 23:28 Report Abuse
 Gavas எந்த ரோல் ஆக இருந்தாலும் நீ கலக்குகிறாய்
Rate this:
குமார் - arabia,இந்தியா
11 ஜூன், 2011 - 20:29 Report Abuse
 குமார் டேய் பாலாஜி... பாலா வ பத்தி பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு.
Rate this:
சங்கீத - coimbatore,இந்தியா
21 ஏப், 2011 - 12:00 Report Abuse
 சங்கீத விஷால் சாதரணமாவே அப்படித்தானே நல்ல வேஷம் . விட்டு கலபுங்க
Rate this:
VELMANI - bangalore,இந்தியா
16 பிப், 2011 - 13:53 Report Abuse
 VELMANI vishal this film ,one of the best for your future. please co-operate with bala sir. wish you all the best.
Rate this:
S.R.NARAYANAN - Vridhachalam,இந்தியா
09 பிப், 2011 - 23:33 Report Abuse
 S.R.NARAYANAN Thalaiva be strong vetri namedhe. yendrum ungal rasigan.
Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in