இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் பிசியான நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தீபிகா படுகோனே. ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் இவரை தங்கள் படத்தில் நடிக்க வைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முன்னணி தயாரிப்பாளளில் ஒருவரான ஏக்தா கபூரின் அடுத்த படத்தில் தீபிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தீபிகாவும், ஏக்தாவும் சமீபத்தில் சந்தித்து பேசிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தீபிகா எந்த முடிவும் எடுக்கவில்யாம். அதே சமயம் சுஜோய் கோஷின் அடுத்த படத்தில் தீபிகா நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை ஏக்தா கபூர் தான் தயாரிக்க உள்ளதாகவும் மற்றொரு தகவலும் பரவி வருகிறது. இந்த படத்தில் தீபிகாவிற்கு ஜோடியாக சைப் அலிகான் நடிக்க உள்ளாராம். இந்நிலையில், இந்த தகவலை ஏக்தா புரோடெக்ஷன்ஸ் நிறுவனமும், பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் திட்டவட்டமாக மறுத்துள்ளன. தீபிகா சுஜோயின் புதிய படத்தில் நடிக்க உள்ள தகவலை மறுத்துள்ள அவர்கள், தீபிகாவுடன் தாங்கள் அடுத்த படத்தில் கூட்டணி அமைக்க உள்ள தகவல் குறித்து மறுப்பு ஏதும் தெரிவில்லை.
எது எப்படியோ 2016ம் ஆண்டு வரை தீபிகாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறதாம்.