'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
தென்னிந்திய நடிகைகளைப் பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணியில் இருந்தால்தான் மிகப் பெரிய ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருப்போம் என்று நினைப்பார்கள். அந்தக் காலத்தில் இருந்தே இந்த எண்ணம் பல முன்னணி நடிகைகளுக்கு இருந்து வந்தது. சமீப காலமாக தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடிப்பதற்கு சமந்தா, ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் கடுமையாகப் போட்டி போட்டு வருகிறார்கள்.
சமந்தா நடித்து கடந்த சில மாதங்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு தமிழ்ப் படங்கள் வெளிவந்தது. தற்போது விக்ரமுடன் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படத்தில் சமந்தா நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை தீபாவளிக்கு வெளிவந்தது. அடுத்து அவர் விஜய் ஜோடியாக நடிக்க உள்ளார். அனுஷ்கா நடித்து அடுத்தடுத்து 'லிங்கா, என்னை அறிந்தால், ருத்ரமா தேவி, பாகுபலி' ஆகிய படங்கள் வெளிவந்தன.
காஜல் அகர்வால் விஜய் ஜோடியாக நடித்த 'ஜில்லா' படமும், தமன்னா அஜித் ஜோடியாக நடித்த 'வீரம்' படமும் இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்தன. அதன் பின் இருவருக்குமே எந்த தமிழ்ப் பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது, காஜல் அகர்வால் தனுஷ் ஜோடியாக 'மாரி' படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தமன்னா, அடுத்து ஆர்யா ஜோடியாக ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த ஆண்டில் இவர்களிருவரும் நடித்த ஒரே ஒரு படமே வெளிவந்தது. தற்போது நடிக்கும் படங்கள் அடுத்த ஆண்டே வெளிவரும். கிளாமராக நடிக்க இவர்கள் இருவருமே தயாராக இருந்தாலும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்காமலே உள்ளது.