தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
பிரதமர் மோடி, தூய்மை இநதியா திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவிலுள்ள 9 முக்கிய பிரபலங்களை கேட்டுக்கொண்டார். அதையடுத்து அவர்களும் தங்களது ஏரியாக்களில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யத் தொடங்கினர். அமீர்கான் மும்பையிலும், கமல் சென்னையிலும், நாகார்ஜூனா ஐதராபாத்திலும் தங்களது ரசிகர்களுடன் இறங்கி சுத்தம் செய்தனர்.
அதையடுத்து, அவர்கள் தங்களது டுவிட்டரிலும் செய்திகளை வெளியிட்டனர். பின்னர், பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது மேலும் சில பிரபல நடிகர் நடிகைகளும் தாமாகவே முன்வந்து இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு வீதிகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.
அவர்களில் தமன்னாவும் ஒருவர், மும்பைவாசியான இவருக்கு இந்தியில் எண்டர்டெயின்மென்ட் படத்தில் நடித்த பிறகு ஒரு ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறதாம். அதனால் தனது ரசிகர்களை இணையதளம் மூலம் ஒன்றுதிரட்டி மும்பையில் சில தெருக்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தியிருக்கிறார் தமன்னா, அந்த போட்டோக்களையும் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.