ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை-26, அஞ்சாதே படங்களில் நடித்த விஜயலட்சுமி, நான் இந்த மாதிரியான கதைகளில் மட்டும்தான் நடிப்பேன் என்று ஒரு கோடு போட்டு நடித்து வருவதால் இன்னமும் பின்தங்கியே இருக்கிறார். அவ்வப்போது ஒரு படத்தில் நடித்தபோதும் அது வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களாகத்தான் உள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் அவர் நடித்த வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா என்ற படங்கள் திரைக்கு வந்தன. இந்த இரண்டு படங்களிலுமே குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்திருந்த விஜயலட்சுமி, தற்போது ரெண்டாவது படம் உள்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், இவரது தங்கை செளமியாவும் சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பவித்ரன் இயக்கிய மாட்டுத்தாவணி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு சினிமாவில் போதுமான வாய்ப்புகள் இல்லை. அதனால் அக்காள் விஜயலட்சுமியிடம் சொல்லி தனக்கு சிபாரிசு செய்யுமாறு கேட்டுக்கொண்டு வருகிறாராம்.
அதோடு, அவர் யாராவது டைரக்டர்களை பட விசயமாக சந்திக்க சென்றால், தானும் அவருடன் தொற்றிக் கொள்கிறாராம் செளமியா. அதனால் தான் கதை கேட்கும் இடங்களில் தங்கையையும் அறிமுகம் செய்து அவருக்கு பொருத்தமான வேடம் இருந்தால் கொடுக்குமாறு கேட்டுக்கொணடு வருகிறார் விஜயலட்சுமி.