தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2009-ம் ஆண்டு வித்யாசாகர் என்ற இஞ்சினியரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் குடியேறினார் மீனா. ஆனால் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே அதேபோல், அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட, கோடம்பாக்கத்துக்கு வந்து முயற்சி எடுத்தார். அதன்விளைவாக தம்பிக்கோட்டை என்ற படத்தில் நடித்தார்.
ஆனால், அந்த படம் வெற்றி பெறாததால், அதன்பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லை. அதனால் தெலுங்கு, மலையாள படங்களில் கவனத்தை திருப்பிய மீனாவுக்கு மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் மெகா ஹிட்டாக அமைந்ததால், அதே படத்தில் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுடன் நடித்தார்.
பின்னர் தமிழில் அப்படம் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இருந்தபோது கமலுக்கு ஜோடியாக நடிக்க கடுமையாக முயற்சி எடுத்தார் மீனா. ஆனால், கெளதமி இடையினில் புகுந்து மீனாவின் வாய்ப்பை தட்டிப்பறித்து விட்டார். அதனால் ஏமாற்றத்துடன் கேரளாவுக்கு சென்ற மீனா, தற்போது பால்யகால சகி உள்ளிட்ட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் சென்னையிலுள்ள தனது பழைய வீட்டில் குடியேறியிருக்கிறார் மீனா. அதோடு, தனது உடல்கட்டையும் ஸ்லிம் பண்ணும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர், தினமும் உடற்பயிறசி மட்டுமின்றி, தீவிர நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். அதனால் தனது வீட்டுக்கு அருகில் உள்ள தெருவில் காலை மற்றும மாலை நேரங்களில் கையில் ஒரு நாய்க்குட்டியை பிடித்தபடி வாக்கிங் செல்கிறார் மீனா. அவருடன் அதே தெருவில் உள்ள சில இளம்பெண்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு வாக்கிங் செல்கிறார்கள்.