தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் அறிமுகமாகி கொஞ்சமே கொஞ்சம் பேர் வாங்கும் நடிகைகள் கூட தெலுங்கில் அறிமுகமான பின் சில சமயம் உச்சத்துக்குப் போய்விடுவார்கள். அப்படி சிறு கதாபாத்திரங்களிலும், சின்ன படங்களிலும் நடித்து வெந்த ரெஜினா, தெலுங்கில் தற்போது திடீரென புகழ் பெற ஆரம்பித்துவிட்டார். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' வெற்றிப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தாலும், ரெஜினாவை தமிழ்த் திரையுலகம் கைவிட்டுவிட்டது. அதன் பின் தெலுங்கில் “கொத்த ஜன்டா, ரா ரா கிருஷ்ணய்யா, பவர்” ஆகிய படங்களில் நடித்து பரபரப்பாக பேசப்படும் நடிகைகளில் ஒருவராகிவிட்டார். அதிலும் 'பவர்' படத்தில் நடிகர் ரவிதேஜாவுக்குக் கொடுத்த அழுத்தமான முத்தத்தால் மேலும் அதிகமாக பேசப்பட்டார்.
அடுத்து, சாய் தரம் தேஜ் நாயகனாக நடிக்கும் 'பில்ல நூவு லேனி ஜீவிதம்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் நாயகன் சாயுடன் ஒரு முத்தக் காட்சியில் நடித்திருக்கிறாராம். இதன் மூலம் தன்னைப் பற்றி மீண்டும் பரபரப்பாக பேச வைத்துவிட்டார் ரெஜினா. சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், “முத்தக் காட்சியில் நடிப்பதைப் பற்றி மட்டும் என் எப்போதுமே ஏதாவது வம்பாகப் பேசி வருகிறார்கள் எனத் தெரியவில்லை. மீடியாக்களும் அதைப் பற்றி எதையாவது எழுதி வருகிறார்கள். முத்தக் காட்சி மட்டும் ஏன் உங்களுக்கு அதிக ஆர்வத்தைத் தருகிறது. கதைக்கு அப்படிப்பட்ட காட்சி தேவைப்படும் போது நான் நடிக்கத் தயங்குவதில்லை. ஆமாம், நான் முத்தக் காட்சியில் நடித்து சாதனை புரியப் போகிறேன்,” என அதிர்ச்சியாக பதிலளித்திருக்கிறார்.