பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் திரைப்படங்களில் அதிமாக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன், என, பாகிஸ்தான் பாடகி ஜெபுன்னிசா கூறியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஜெபுன்னிசா ஹுமாயுன் பங்கஷ். பாகிஸ்தானில், ஜெப் அன்ட் ஹனியா என்ற பெயரில் இசைக்குழுவும் நடத்தி வருகிறார்.ஹைவே, மெட்ராஸ் கபே போன்ற இந்தி படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
டில்லியில், சார்க் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்துள்ள ஜெபுன்னிசா கூறியதாவது: இந்தியாவுக்கு வருவது இனிமையான அனுபவம். கடந்த, 2009லிருந்து பலமுறை இந்தியா வந்துள்ளேன். ஏற்கனவே சில இந்தி படங்களில் பாடியுள்ளேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, பாலிவுட் படங்களில் முழு கவனத்தையும் செலுத்த திட்டமிட்டுள்ளேன். அதிகமான பாலிவுட் படங்களில் பாட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.