தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
அபிஷேக் சர்மா இயக்கத்தில், அன்னு கபூர், பியூஸ் மிஸ்ரா, அனுபம் கெர், லிசா ஹைடன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும், அக்ஷ்ய் குமார் கெஸ்ட் ரோலிலும் நடித்து வெளிவந்துள்ள காமெடி கலாட்டா படம் தி சவுக்கீன்ஸ். இதேப்போல், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் ‛‛ரங் ரசியா. கேத்தன் மேத்தா இயக்க, ரன்தீப் ஹூடா, நந்தனா சென் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் நவம்பர் 7ம் தேதி ரிலீசாகின. முதல்நாளில் தி சவுக்கீன்ஸ் படம் ரூ.5 கோடியும், ரங் ரசியா ரூ.50 லட்சம் வசூலித்துள்ளது. இரண்டு படங்களுக்கும் இருதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளதால், ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. அதனால் முதல்நாளில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.