ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லாலாக்கு டோல் டப்பி மா என்று பாடி ஆடிக்கொண்டு சினிமாவுக்கு வந்தவர் பிரபுதேவா. டான்சராக இருந்து, டான்ஸ் மாஸ்டராகி, நடிகராகி, இப்போது இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் கமர்ஷியல் இயக்குனராக இருக்கிறார். பிரபுதேவாவின் அடுத்த அவதாரம் சண்டை இயக்குனர்.அவர் தற்போது இந்தியில் இயக்கி வரும் ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் சண்டை இயக்குனராகியிருக்கிறார்.
படத்தில் ஒரு வாள் சண்டை இருக்கிறது. அதில் கொஞ்சம் ஸ்டைலாக டான்ஸ் ஆடியபடியே ஹீரோ அஜய்தேவ்கான் வாள் சண்டை போட வேண்டும். இதற்காக ஸ்டண்ட் அமைக்க வந்தவருக்கு டான்ஸ் மூவ்மெண்டையும், சண்டை மூவ்மெண்டையும் சேர்த்து கம்போஸ் பண்ணத் தெரியவில்லை. இதனால் பிரபுதேவாவே இரண்டையும் சேர்த்து கம்போஸ் செய்து விட்டார். யூ டியூப்பில் வைரலாகி கிடக்கும் இந்தப் படத்தின் டீசரில் சில விநாடிகளே இடம்பெறும் இந்த வாள் சண்டைக்கு செம ரெஸ்பான்ஸ். படத்தில் படு ஸ்டைலாக இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறதாம்.