ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் ஷங்கர் தாலி எடுத்து கொடுக்க, இயக்குநர் அட்லி - நடிகை ப்ரியா திருமணம் சிறப்பாக நடந்தேறியது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். முதல்படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்த அட்லி, தனது 2வது படமாக விஜய்யை இயக்க இருக்கிறார். அட்லி, கனா காணும் காலங்கள் டிவி தொடரிலும், சிங்கம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களிலும் நடித்த நடிகை ப்ரியாவை காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் ஓ.கே. செல்ல திருமணம் செய்ய முடிவெடுத்து, செப்டம்பர் மாதம் நிச்சயமும், இன்று(நவ. 9ம் தேதி) திருமணமும் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அட்லி - ப்ரியா திருமணம், சென்னையில் இன்று சிறப்பாக நடந்தது. இயக்குநர் ஷங்கர் தனது கையால் தாலி எடுத்து கொடுக்க, அட்லி, ப்ரியா கழுத்தில் தாலி கட்டினார்.
இந்த திருமணத்தில் இயக்குநர்கள் ஷங்கர், பாலா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.