ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
ரன்பீர் கபூரும், ஸ்ருதிஹாசனும் இருவரும் இணைந்து எந்தப்படங்களிலும் நடிக்கவில்லை, ஆனால் விளம்பர படங்களில் நடித்துள்ளனர். விளம்பர படங்களிலேயே அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரையும் இணைத்து படம் எடுக்க பலர் முயன்று வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் அயன் முகர்ஜி. இதில் சஞ்சய், ஏற்கனவே ரன்பீர் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரையும் தனித்தனியாக வைத்து படம் இயக்கியுள்ளார். அயன், ரன்பீரை வைத்து படம் இயக்கியுள்ளார். இந்த இருவர்களில் அயன் முகர்ஜியின் படத்தில் இருவரும் நடிப்பார்கள் என தெரிகிறது. இதுதொடர்பாக இருவரிடமும் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரன்பீர்-ஸ்ருதி இருவரும் சின்ன வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். அவர்களது அப்பாக்களான ரிஷி மற்றும் கமல் ஆகியோரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.