600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
குரு, கமல்நாத் என்ற இரட்டையர்கள் ஹீரோக்களாக அறிமுகமாகும் படம் குரு சுக்ரன். திரிபுரா, சாத்னா என்ற இரு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. இதில் இரட்டை சகோதரர்கள் 48 மணி நேரம் தொடர்ந்து வில்லனுடன் மோதியிருக்கிறார்கள்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் ஆனந்த் கூறியதாவது: படத்தின் முக்கிய பகுதி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. இந்த காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிக்க முடியுமா என்று டுவின்ஸ் சகோதரர்களிடம் கேட்ட பிறகே சண்டை இயக்குனர் மிரட்டல் செல்வா சண்டை காட்சிகளை வடிவமைத்தார். வில்லன் அருள்மணியுடன் இருவரும் மோதும் சண்டைக் காட்சியை தொடர்ச்சியாக 48 மணிநேரம் படமாக்கினோம். எந்த களைப்போ, சோர்வோ இல்லாமல் நடித்தார்கள். இந்த சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும், ஹீரோ, ஹீரோயின்கள் மட்டும்தான் புதுமுகம், ஆடுகளம் நரேன், செண்ட்ராயன், சுதா சந்திரன், சண்முகராஜன், ஸ்ரீரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ என பழைய முகங்களும் நடிக்கிறார்கள். செல்லத்துரை ஒளிப்பதிவை கவனித்துக் கொள்கிறார். பிரபல இசை அமைப்பாளர் சந்திரபோஸ் மகன் சந்தோஷ் சந்திரபோஸ் இசை அமைக்கிறார். என்கிறார் ஆனந்த்.