ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
சிவகார்த்திகேயன் விட்டுவிட்டு வந்த சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மா.பா.கா.ஆனந்த் பெரிய திரையில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாது ஹீரோவாக நடித்தார். இப்போது அட்டி என்ற பெயரில் தயாராகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடிக்கிறார். அர்ஜூன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி பாபு இசை அமைக்கிறார்.
இயக்குனர் சுராஜிடம், அலெக்ஸ் பாண்டியன், மாப்பிள்ளை படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜயபாஸ்கர் இயக்குகிறார். "சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் நண்பர்கள் சிலர் இணைந்து மினரல் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஆனந்துக்கு வரும் காதலும், அதனால் வரும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி தீர்க்கிறார்கள் என்பதும்தான் கதை. முழு படமும் ஐஸ்ஹவுஸ் பகுதியில் படமாக்கப்படுகிறது. பாடல் காட்சிகளுக்கு மட்டும் அவுட்டோர் செல்ல திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் விஜய் பாஸ்கர்.