ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்டகத்தி' நந்திதா நடித்ததில், கிராமத்து கெட்டப்புகளில் நடித்த படங்களே, அவருக்கு வெற்றியை கொடுத்துள்ளன. அதனால், கிராமத்து கதையென்றால், முதலில், அவரிடம் தான் கால்ஷீட் கேட்கின்றனர். ஆனால், நந்திதாவுக்கோ, தன் மீது கிராமத்து நடிகை என்ற முத்திரை விழுவதில், பெரிய அளவில் ஆர்வம் இல்லை. இந்த முத்திரை, முன்னணி நடிகையாவதற்கு தடையாக இருக்கும் என, நினைக்கிறார். அதனால், தான் நடித்து வந்த கிராமத்து கெட்டப்பிலேயே, சினிமா வட்டாரங்களில், இதுவரை விசிட் அடித்து வந்தவர், இப்போது படுகிளாமரான, மாடர்ன் டிரஸ் அணிந்து வருகிறார். அத்துடன், 'நகர்ப்புற இளம்பெண் வேடத்துக்கு, நான் சரிப்பட்டு வருவேன்' என, இயக்குனர்களிடம் வாய்ப்பும் கேட்டு வருகிறார்.