Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் தனுஷ் - காஜல் அகர்வால்

06 நவ, 2014 - 16:17 IST
எழுத்தின் அளவு:

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அனேகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். அனேகன் படத்தின் பாடல்கள் வரும் 10ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூதாடி என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இந்த இரண்டு படங்கள் தவிர்த்து காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரின் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார்.


தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் காஜல் அகர்வால், ஜில்லா படத்துக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம் இது. இப்படத்தில் நடிப்பது குறித்து காஜல் அகர்வாலும், ராதிகா சரத்குமாரும் சில தினங்ளுக்கு முன் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். சம்பளம், கால்ஷீட் போன்ற விவரங்கள் குறித்து பேசியதோடு, உதயநிதி ஸ்டாலினுக்குக் கொடுக்க வேண்டிய 50 லட்ச ரூபாய் பஞ்சாயத்து பற்றியும் பேசியதாக தகவல் அடிபடுகிறது. தனுஷ், காஜல்அகர்வால் தவிர மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள்? டெக்னீஷியன்கள் யார்? என்பன போன்ற விவரங்கள் குறித்த டிஸ்கஷனில் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஈடுபட்டிருக்கின்றனர். உறுதி செய்யப்பட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in