ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்க பாலிவுட் சினிமா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஓட்டபந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை பாக் மில்கா பாக் என்று படமாக எடுத்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து குத்துசண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கை படமானது. தொடர்ந்து கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோரின் வாழ்க்கையும் படமாக இருக்கிறது. இந்நிலையில் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதினின வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்க உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் குறிப்பிடத்தக்க கேப்டன்களில் முகமது அசாரூதினும் ஒருவர். 2000-மாவது நடந்த மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக நடந்த குற்றச்சாட்டால் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகினார். அதன்பின்னர் அரசியலில் இணைந்து எம்.பி.ஆகவும் ஆனார். ஆண்டனி டிசோசா தான் அசாரூதின் வாழ்க்கையை படமாக இயக்க உள்ளார். பாலாஜி மோசன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனுஷ் கார்க் உறுதி செய்துள்ளார்.
ஆண்டனி டிசோசா, அசாரூதின் உடன் மிகவும் நெருக்கமானவர், அவரைப்பற்றி பல விஷயங்கள் ஆண்டனிக்கு தெரியும். அசாரூதின் கிரிக்கெட்டில் சேர்ந்தது முதல் கடைசியில் ஊழலில் சிக்கியவது வரையும், நடிகை சங்கீதாவை காதலித்து மணந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் இப்படத்தில் சொல்ல இருக்கிறார். இப்படத்தில் அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடிக்கலாம் என தெரிகிறது. விரைவில் படம் பற்றியும், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய அறிவிப்பையும் ஆண்டனி வெளியிடுவார். அடுத்தாண்டு மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்க உள்ளது.