Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்த தீபிகா

06 நவ, 2014 - 12:41 IST
எழுத்தின் அளவு:

தீபிகா படுகோனே, ஷாருக்கானுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் ஓம் சாந்தி ஓம். இப்படம் பாலிவுட் வரலாற்றில் மறக்க முடியாத படமாக மாறியதுடன், பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் 80 கோடிகளை வசூலித்தது. இந்த படத்தின் வெற்றி தீபிகாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து அவரது வெற்றி பயணமும் தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த லவ் ஆஜ் கல், பசானா ஏ ஹசீனோ, காக்டைல் உள்ளிட்ட படங்களும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்ததால் பாலிவுட்டின் ராசியான நடிகையாக தீபிகா உருவெடுத்தார்.

இந்நிலையில் முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றியை அள்ளிய தீபிகா, ஷாருக்கான் ஜோடி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தது. இந்த படம் அனைத்து பாலிவுட் படங்களின் சாதனையையும் முறியடித்து பாக்ஸ் ஆபிசில் 200 கோடியை வசூலித்ததுடன்ல மெகா பிளாக்பஸ்டர் படமாக இருந்தது. இந்த மெகா ஹிட் ஜோடி ஹேப்பி நியூ இயர் படத்தில் 3வது முறையாக ஜோடி சேர்ந்தது. இந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது. மேலும் ரிலீசான மூன்றே நாட்களிலேயே 100 கோடியை சம்பாதித்த படம் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியது. இதனால் ஹாட்ரிக் மெகா ஹிட் ஜோடி என்ற பெருமையை தீபிகா-ஷாருக் ஜோடி பெற்றுள்ளது.


ஷாருக்கானுடன் சேர்ந்து தீபிகா நடித்த இந்த 3 படங்களும் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றத்துடன், தீபிகாவின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த 3 படங்களிலும் தீபிகாவின் கேரக்டர் மறக்க முடியாததாகி விட்டது. இந்த 3 படங்களில் ஓம் சாந்தி ஓம் படமும், ஹேப்பி நியூ இயர் படமும் தீபாவளிக்கு ரிலீசானவைகள். இதனால் தீபாவளி பண்டிகை, தீபிகாவிற்கு மறக்கமுடியாத பண்டிகையாகி விட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in