தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அலிபாபா, கற்றது களவு படங்களில் நடித்த கிருஷ்ணாவுக்கு கழுகு படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு யாமிருக்க பயமேன் படமும் வெற்றி பெற்றதால் இப்போது அவரும் கமர்சியல் நடிகராகி விட்டார். வானவராயன் வல்லவராயன் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத போதும், தற்போது அவர் கைவசம், வன்மம், யாட்சன், விழித்திரு, இதயம் போன்ற படங்கள் உள்ளன.
இதில் யாட்சனில் ஆர்யாவுடன் நடித்திருப்பவர், வன்மத்தில் விஜயசேதுபதியுடன் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.மேலும், இந்த படத்தில் இவருக்கு ஒரு ப்ளே பாய் வேடம்தான். அதோடு யாட்சனிலும ஆர்யாதான் அழுத்தமான ரோலில் நடித்து வருகிறார். அதனால், இந்த வேகத்தில் வெயிட்டான கதைகளில் நடித்து விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் வரிசையில் தானும் இடம் பிடித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கிருஷ்ணா.
அதனால் வித்தியாசமான கதை தேடலில் சில மாதங்களாக ஈடுபட்டிருந்த அவர் எதிர்பார்த்தபடியே தற்போது யாக்கை என்றொரு கதையை ஓகே பண்ணியிருக்கிறார். இந்த கதை மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டதால் அதை கழுகு படத்தை தயாரித்த தனது தந்தை பட்டியல் சேகரையே தயாரிக்க வைத்திருக்கிறார். இன்னும் சிலதினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.
மேலும், ஆண்மை தவறேல் என்ற படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கும் இந்த படத்தின் நாயகியாக சுப்ரமணியபுரம் சுவாதி நடிக்கிறார். யாட்சன் படத்திலும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் இதே சுவாதிதான். அவருடன் அப்படத்தில் நடித்தபோது கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியிருப்பதாக அனைவரும் சொன்னதை அடுத்து, யாக்கையிலும் சுவாதியே தனக்கு வேண்டுமென்று முன்பதிவு செய்து விட்டாராம் கிருஷ்ணா.