மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டபுள் மீனிங் புகழ் காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இப்போது வீட்டில் உட்கார்ந்து புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். வெ.ஆ.மூர்த்தி நடிகராக இருந்தாலும் அடிப்படையில் எழுத்தாளர் மற்றும் ஜோதிடர். மாலைசூடவா என்ற படத்தின் கதை அவர் எழுதியதுதான். ருசி என்ற படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதினார். இதுதவிர 40 படங்களுக்கு மேல் காமெடி டிராக் எழுதியுள்ளார். 200க்கும் மேற்பட்ட டி.வி காமெடி ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார்.
தற்போது சின்னத்திரை, பெரிய திரையில் இருந்து சற்று விலகி வீட்டில் ஓய்வில் இருக்கும் வெ.ஆ.மூர்த்தி புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். காமெடியை மையமாக கொண்ட புத்தகங்கள் அவை. இதுவரை 7 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இதற்கு பிறகு ஜோதிடம் தொடர்பான புத்தகங்கள் எழுதவும் முடிவு செய்திருக்கிறார்.