'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சதாசிவ் அம்ரபுர்கர் இன்று (நவம்பர் 3) அதிகாலை காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஆன்கீன், இஷாக், கூலி நம்பர் ஒன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் 2 பிலிம்பேர் விருதுகளையும், சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். 1991ம் ஆண்டு சதாக் படத்திற்காக சிறந்த வில்லனுக்கான விருதையும் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் தனது பள்ளி தோழியான சுனந்தா கர்மர்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிப்பில் ஆர்வம் கொண்டு நடிக்க வந்த இவர் வில்லனாகவும், கவுரவ நடிகராகவும், காமெடி நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.