சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
ரஜினி நடித்த பாண்டியன், உழைப்பாளி, கார்த்திக் நடித்த பொன்னுமணி என இளையராஜா இசையமைத்த சில படங்களுக்கு பின்னணி இசையமைத்தபடி சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் கார்த்திக் ராஜா. அவர் அறிமுகமான நேரத்தில், ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை -என்பது போன்று கார்த்திக் ராஜா கீப்போர்டில் கைய வச்சா அது சரியாக இருக்கும் என அவரது திறமை குறித்து பேட்டிகளில் கூறி வந்தார் இளையராஜா.
அதற்கேற்ப மாணிக்கம், அலெக்சாண்டர், உல்லாசம் என வரிசையாக கார்த்திக்ராஜா ஹிட் கொடுத்து வந்தபோதும் பின்னர், மார்க்கெட்டில் பின்தங்கி விட்டார். இருப்பினும் வருடத்துக்கு ஓரிரு படங்களுக்கு இசையமைத்தபடி தன்னை பீல்டில் தக்க வைத்துக்கொண்டு வரும் அவர், யுவன் ஷங்கர் இசையமைக்கும் படங்களிலும் அவருக்கு துணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும், தற்போது வாராயோ வெண்ணிலாவே, அவன் அவள் என சில படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், இந்த மாதம் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரம்மாண்ட இசைக்கச்சேரி நடத்தப் போகிறாராம் கார்த்திக்ராஜா. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்தே பெரும்பாலான பாடல்கள் இடம்பெறுவதோடு, அந்த பாடல்களை பாடிய மனோ, சித்ரா போன்ற பிரபல பாடகர்-பாடகிகளும் இந்த நிகழ்ச்சியில் பாடுகிறார்களாம். அவர்களுடன் இளையராஜாவும் கலந்து கொள்கிறாராம்.