ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் அனேகன் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் முதல்படியாக, நவம்பர் 10ம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிட உள்ளதாக அனேகன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அனேகன் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் தயாராகி வருகிறோம். இதற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி உள்ள பாடல்களை நவம்பர் 10ம் தேதி வெளியிட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
படத்தின் பாடல்களை வைரமுத்து, வைரக்டர் சி.எஸ்.அமுதன். கபிலன் வைரமுத்து, ராகேஷ் ஆகியோர் எழுதி உள்ளதாகவும் கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசர் டிரைலரை இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனராம்.