இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் டீசர் நேற்று (நவ 1) வெளியானது. யூ டியூப்பில் லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கும் டீசரைப் பற்றிய ஒரு பார்வை.
ஏழுமலையான் உருவத்தோடு ராக்லைன் நிறுவன பெயருடன் ஆரம்பிக்கிறது லிங்கா டீசர். மாவட்ட கலெக்டரான ராஜ லிங்கேஸ்வரன் (ரஜினி) கட்டிய அணையின் கல்வெட்டையும் அணையும் ஸ்டைலாக பார்க்கிறார் இன்னொரு ரஜினி.
ஏ.ஆர்.ரகுமான் பெயரைத் தொடர்ந்து ரெயில் சண்டைக் காட்சியும் பாலத்தை தகர்க்க சிலர் கயிறு கட்டி பாலத்தில் இறங்கும் காட்சியும் இடம்பெறுகிறது. அதன் பிறகு தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ் பெயரும், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜனி பெயரும் இடம் பெறுகிறது.
பிரம்மாண்ட செட்டுகளில் ரஜினி அனுஷ்கா மற்றும், சோனாக்ஷியுடன் ஆடுவது சிவாஜி படத்தின் செட்டுகளை நினைவுபடுத்துகிறது. மனிதன் படத்தில் தோல் சட்டை பேண்ட் அணிந்து வருவார் ரஜினி. அதுபோன்ற ஒரு ஷாட்டும், சிவாஜி படத்தில் "தீ தீ... ஜெகஜோதி ஜோதி..." பாடலில் வரும் ஒரு துப்பாக்கி ஸ்டைலை இதிலும் நிகழ்த்துகிறார். கலெக்டர் ரஜினி மக்களுக்கு நடுவில் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து நடந்து வருவது, படையப்பா ஸ்டைலில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பது, கோட்டை தூக்கி தோளில் போட்டு வருவது என்று காட்சிகள் இடம் பெயர்கிறது.
டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கும்போது ஆங்கிலேயர் ஆட்சியில் ராஜ லிங்கேஸ்வரன் கட்டிய அணைக்கு நிகழ்காலத்தில் ஒரு ஆபத்து வருகிறது. அதனை இன்றைய ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என்பது தெளிவாகிறது.
பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் பிரம்மாண்டமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. டீசரில் 6 கெட் அப்புகள் காட்டப்படுகிறது. ஆனால் படத்தில் மூன்றாவதாக ஒரு ரஜினி இருக்கிறார். அது எந்த இடத்திலும் இடம்பெறாமல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி 80களில் இருந்த அதே தோற்றத்துடன், அழகுடன், ஸ்டைலுடன், வேகத்துடன் இருப்பதுதான் டீசரின் ஹைலைட்.