நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் அவரின் தோழி சுசானேவுக்கும், 2000ல், திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவாகரத்து கோரி, இருவர் சார்பிலும், மும்பை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இந்த வழக்கில் விசாரணை நடந்தது. இந்நிலையில், இருவருடைய சம்மதத்தின் அடிப்படையில், விவாகரத்து வழங்குவதாக, குடும்ப நல கோர்ட் நேற்று அறிவித்தது.
இதுகுறித்து சுசானே கூறுகையில், நானும், ஹிருத்திக்கும், ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் மரியாதை அளிக்கிறோம். இரண்டு குழந்தைகளையும் பராமரித்து, வளர்க்கும் பொறுப்பு இரண்டு பேருக்குமே உள்ளது. கண்டிப்பாக, அந்த கடமையை நிறைவேற்றுவோம், என்றார்.