ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோச்சடையான் படம் வெளியாகவிருந்த போது, அப்படத்துக்கு பப்ளிசிட்டி தேடி கடந்த மே மாதம் ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த்!
கடவுளுக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லி டிஜிட்டல் பயணத்தை தொடங்கியதாக முதல் ட்வீட் பண்ணினார்.
ரஜினி ட்விட்டரில் இணைந்ததை தொடர்ந்து ரஜினி ரசிகர்களும் மற்றவர்களும் அவரது ட்விட்டரை ஃபாலோ பண்ணத் தொடங்கினர்.
என்னை டுவிட்டரில் அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று 2வது ட்வீட் பண்ணினார்.
அதன் பிறகு நரேந்திரமோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் வாழ்த்து சொன்னார். பிறகு கோச்சடையான் படக்குழுவுக்கு வாழ்த்து சொன்னார்.
ஆக..இதுவரை மொத்தம் 7 ட்வீட்களை மட்டுமே செய்திருக்கிறார் ரஜினி.
ஆனாலும் அவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி ரஜினியை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை (10 லட்சம் பேர்) நெருங்கிவிட்டது.
சரியாக சொல்வதென்றால் 9 லட்சத்து 99 ஆயிரம். 10 லட்சத்தை ஓரிரு நாட்களில் எட்டிவிடும்.
ரஜினி ட்விட்டர் பக்கத்தில் ஆக்ட்டிவ்வாக இல்லை என்றாலும், அவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை.
மாறாக, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடைத்திராத ஒரு அரிய விஷயம்தான்!
சும்மாவா...சூப்பர் ஸ்டார் ஆச்சே?