சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் - இசை. சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது.
நவம்பர் 21-ஆம் தேதி இப்படத்தின் பாடலிசையை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவே இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா நடித்த அன்பே ஆருயிரே மற்றும் நியூ படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை அமைத்திருந்தார்.
எனவே, இசை படத்திற்கும் இசையமைக்க எஸ்.ஜே.சூர்யா முதலில் அணுகியது ஏ.ஆர்.ரஹ்மானைத்தான்.
இசை சம்பந்தமான கதையை கொண்ட படம், அதோடு இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையிலான மோதலைப் பற்றிய கதை இது என்பதால் தான் இசையமைக்க மறுத்துவிட்ட ஏ.ஆர்.ரகுமான் எஸ்.ஜே.சூர்யாவின் இசைஞானம் பற்றி அறிந்தவர் என்பதால் நீங்களே இசையமைக்கலாமே என்று சொல்ல...
எஸ்.ஜே.சூர்யா இசையமைப்பாளர் ஆனார்..
இசை படத்தின் பாடல்களை வருகிற 9-ஆம் தேதி வித்தியாசமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.
அன்றைய தினம்தான் ரஜினியின் லிங்கா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெறவிருக்கிறது.
இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள லிங்கா படப் பாடல்கள் வெளியாகும் அதே நாளிலேயே எஸ்.ஜே.சூர்யா இசை அமைத்துள்ள இசை படத்தின் பாடல்களும் வெளியாக இருக்கிறது.
வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பது என்பது இதானா?