ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
7ம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக அறிமுகமானவர் மிஷா கோஷல். அதன் பிறகும் பல படங்களில் அவர் ஹீரோயின்களின் தோழியாக நடித்துள்ளார். தற்போது அவர் மூச், யாழ் உள்பட 3 படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: நான் திடீரரென சினிமாவில் நுழைந்து ஹீரோயின் ஆகிவிடவில்லை. சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து என்னை மெருகேற்றிக்கொண்டு நடித்திருக்கிறேன். ஏ.ஆர்.முருதாஸ் சார்தான் என் வழிகாட்டி. அவரின் ஆலோசனைப்படிதான் படிப்படியாக நான் வளர்ந்து வருகிறேன். தற்போது 5 படங்களில் நடித்து வருகிறேன். அதில் 3 படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன்.
யாழ் என்ற படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். காதலனைத் தேடி யுத்த பூமிக்கு செல்லும் பெண்ணின் கேரக்டர். இந்த படம் எனது நடிப்பு திறமையை வெளியுலகத்துக்கு சொல்லும் படமாக இருக்கும். வெற்றிமாறன் சார் இயக்கும் விசாரணை படத்தில் பெண் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறேன். ஹீரோயினாக நடிக்கும்போது சிறிய கேரக்டரில் நடிக்காதே என்றார்கள். வெற்றிமாறன் சார், பாலா சார், முருகதாஸ் சார் படங்களில் ஒரு சீன் என்றால்கூட நான் நடிப்பேன். என்கிறார் மிஷா கோஷல்.