அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஜெய் ஆகாஷ் இயக்கி இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் காதலுக்கு கண்ணில்லை. இந்த படத்திற்கான கதையை எழுதி தயாரித்திருப்பவர் ஒய்.இந்து. இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். காதலுக்கு கண்ணில்லை படம் நேற்று (அக் 31) வெளிவருவதாக இருந்தது. ஆனால் திடீரென வெளிவரவில்லை.
படத்தை திரையிட சிவா என்ற மீடியேட்டரை தயாரிப்பாளர் இந்து நியமித்திருந்தாகவும், அவர் இந்துவுக்கு நள்ளிரவில் போன் செய்து ஆபாசமாக பேசியும், நேரில் சந்திக்கும்போது முத்தம் கொடுக்க முயற்சித்தும் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
சிவாவின் செயல்களை கண்டித்து அவரை விரட்டி அடித்ததால் அந்த கோபத்தில் அவர் படத்தை திரையிட விடாமல் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் இந்து நீலாங்ரை போலீசில் மீடியேட்டர் சிவா மீது புகார் அளித்துள்ளார்.