பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
டைம்ஸ் செலிபிக்ஸ் என்ற அமைப்பு, பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் புகழ்பெற்ற நட்சத்திரங்களின் ரேட்டிங் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் ரேட்டிங், டிவி மற்றும் ஆன்லைனில் அந்த நட்சத்திரம் பற்றிய செய்திகள், இன்டெர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் 60 விதமான புள்ளிவிபரங்கள், 250 பத்திரிக்கைகள், டிவி சேனல்களின் ரேட்டிங் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் செப்டம்பர் மாத ரேங்கிங் பட்டியலில் நடிகர்களில் சல்மான் கானும், நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் முதலிடத்தில் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி சல்மான் முதலிடத்திற்கு வந்துள்ளார். இதே போல் மேரிகோம் படத்தின் வெற்றியால் பிரியங்கா முதலிடத்தில் உள்ளார்.
நடிகர்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடத்திலும், ஹிருத்திக் ரோஷன் 2வது இடத்திலும், ஷாருக்கான் 3வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் அமிதாப் பச்சன் 6வது இடத்தில் உள்ளார். அமீர் கான் 11 வது இடத்தில் உள்ளார். இதே போல் நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா 3வது இடுத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார். 2வது இடத்தில் தீபிகா படுகோனேவும், 3வது இடுத்தில் கத்ரினா கைப்பும் உள்ளனர். ஆலியாபட் 9வது இடத்தில் உள்ளார்.